Posted by admin on 19-06-2026
முருகப்பா பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் தடுப்பு பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகப்பன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மத்திய அரசு வழக்கறிஞரும், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் சட்ட சேவை உறுப்பினருமான முருகேசன் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறினார். இளம் வயது முதலே இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை மேல்நிலை மாணவ மாணவிகளின் முன்னிலையில் எடுத்துரைத்தார். நம் நாட்டின் இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாத ஆரோக்கியமான சமுதாயமாக வளர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வீரசேகர் இந்துமதி சார்பாக புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார். ஆசிரியர்கள் மோகன்ராசன் சாத்தையா சந்தானகிருஷ்ணன் கண்ணதாசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பிரபு நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்தார்.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment
Your comment will be visible after admin approval.