Wed, Aug 05, 2026 04:07 AM

காரைக்குடி, கலாம் கவி கிராமம் விசாலையன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழா தமிழினிது- ௨௬ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Posted by Admin on 20-05-2026


காரைக்குடி, கலாம் கவி கிராமம் விசாலையன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழா தமிழினிது- ௨௬ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைக்குடி, கலாம் கவி கிராமம் விசாலையன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழா தமிழினிது- ௨௬ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

19.05.26 அன்று சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026 ஆண்டுக்கான முத்தமிழ் விழா ‌தமிழினிது -௨௬ இரண்டாம் நாளன்று கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய முனைவர் சேது குமணன் அவர்களின் வலிக்காட்டுதலில் மாணவர்கள் தமிழ் பண்பாட்டினையும் தொன்மையையும் பறைசாற்றும் வகையில் விளையாட்டு போட்டிகளான கயிறு இழுத்தல், சேவல் சண்டை, உறியடித்தலில் மாணவர்களும் பேராசிரியர்களும் ஆர்வமாக பங்கேற்றனர். .

 மதிப்பிற்குரிய முதல்வர் பேராசிரியர் முனைவர் வி.பேபி ராணி தலைமையுரையாற்றினார்கள். விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் @ தமிழ்முடியரசன்,

தமிழாசிரியர் தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, அவர்கள் தமது உரையில் தமிழரின் கலாச்சாரத்தில் பண்பாடும், தொன்மையையும் தமிழ்மொழி ஆற்றிய பங்குகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். மேலும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், பாவாணர் வாசிப்பு இயக்கம் தேவகோட்டை தலைவரான இவர் புத்தகம் வாசிப்பு குறித்து எடுத்துரைத்தார்கள். சனவரி,2024 இல் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சிறந்த தேர்தல் கல்வியறிவுக் குழு ஒருங்கிணைப்பாளர் என்ற விருதினைப் பெற்ற ஒரேயொரு பள்ளி ஆசிரியர் என்ற பெருமை பெற்ற இவர் தனது வாழ்கை நுன்னறிவுகளை மாணவ மாணவியரிடம் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும்செல்போன்களின் பயன்பாடு மாணவர்களின் வாழ்வை சீர்திருத்திருக்கிறதாசீர்குழைக்கிறதா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தை நடுவராக வழிநடத்தி தன் கருத்துக்களை மாணவ, மாணவியரிடம் ஏடுத்துரைத்தார்கள்.

சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் திருமதி கோகிலம் குமணன் அவர்களும் அறங்காவலர் மற்றும் சென்னை சோகா இகெதா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் கண்மணி சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு விழாவவை சிறப்பித்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக தொன்று தொட்டு கற்றுத்தரப்பட்டு பாதுகாக்கப்படும் கலை வடிவங்களான தேவராட்டம், பொம்மல்லாட்டம், சிலம்பாட்டம் கிராமிய பாடல் என தமிழரின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் மிகச் சிறப்பாக இவை 

அனைத்தையும் பறைசாற்றினர். மேலும் ட்ரீம்ஸ் எபிஇச் மேனேஜ்மென்ட் இசைக்குழு காரைக்குடி, அவர்களின் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கான எற்பாடுகளை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களான, முனைவர். அ. கவியரசு உதவி பேராசிரியர், இரா. மீனா உதவி பேராசிரியை மற்றும்

தமிழ் மன்றத் தலைவர் செல்வன். த. வை. சு. விஷால் , தமிழ் மன்றத் தலைவி செல்வி ந.இலக்கியா, மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. நம்பிராஜன் , மாணவர் மன்றத் தலைவி செல்வி. ச. சரண்யா, விழாவிற்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக ஒருக்கினைத்தனர்.

 இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாகவும் விமர்சையாகவும் கொண்டாடுவதற்கு உறயாக இருந்தனர்.

 

 

Share: 70 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.