Posted by admin on 09-07-2026
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகின்ற 31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் நேரில் வருகை புரிந்து பயனடையலாம் –மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தகவல்.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகின்ற 31.07.2026 வரை நடைபெற உள்ளது. காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள்(Machinist) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், பற்றவைப்பவர்(Welder), கணினி இயக்குபவர் (COPA) போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ள (Industry 4.0 TATA Technology) தொழில் 4.0 மைய தொழிற்பிரிவுகளான மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன் (Advanced CNC Machining Technician), அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) ஓராண்டு தொழிற்பிரிவுகளும் உள்ளன.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில், Welder தொழிற்பிரிவை தவிர மற்ற தொழிற்பிரிவில் சேர மாணவர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றவைப்பவர் (Welder) தொழிற்பிரிவில் சேர்ந்து கொள்ளலாம்.
மேலும், ”தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான” காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் சேர்ந்து கொள்ளலாம். அவ்வாறாக விண்ணப்பிக்க வருகைபுரியும் பொழுது மாணாக்கர்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (8th/10th), சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவை உடன் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.1750/- இலவசமாக பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், மூடுகாலணிகள், பஸ்பாஸ் ஆகியவை பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவுனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். எனவே, ITI பயிற்சியில் சேர்ந்து பயனடைவீர்.
மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்,தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக பயிற்ச
Leave a Comment
Your comment will be visible after admin approval.