Wed, Aug 05, 2026 05:36 AM

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Posted by admin on 15-06-2026


அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவியல் பாடங்களுக்கான முதற் சுற்று கலந்தாய்வு துவங்கியது. 
கல்லூரியின் உமையாள் அரங்கில் முதல்வர் முனைவர் வசந்தி தலைமையில் நடைபெற்ற இளநிலை அறிவியல் பாடங்களுக்கான இக்கலந்தாய்வில், இவ்வாண்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளில் மொத்தம் உள்ள 1068 இடங்களில் சேர்வதற்கு மொத்தம் 13,032 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு அறிவித்துள்ள இணையதளம் வழியாக விண்ணப்பித்துள்ள மாணவர்களில் ஒருவர் எத்தனை பாடத்திற்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் , அழகப்பா அரசு கலைக் கல்லூரிக்கு மொத்தம் விண்ணப்பித்த 13,032 மாணவர்களில் கலை பாடத்திற்கு இரு சுழற்சிளிலும் சேர்த்து 25,046 விண்ணப்பங்களும், அறிவியல் பாடத்திற்கு இரு சுழற்சிகளுக்கும் சேர்த்து 25,135 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். முன்னதாக 06/06/2026 அன்று விளையாட்டு,முன்னாள் ராணுவத்தினர்,அந்தமான் நிக்கோபார், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Share: 1,008 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.