Wed, Aug 05, 2026 04:04 AM

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியொட்டி 20,000 மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

Posted by admin on 17-07-2026


மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியொட்டி 20,000 மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

ஆடி முதல் வெள்ளி: மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆடி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் தடுப்புக் கட்டைகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்த நிலையில், சுமார்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரகாளி அம்மன் மற்றும் அடைக்கலம் காத்த அய்யனாரை தரிசித்து வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
 மேலும் கோவிலுக்கு வந்த பஸ்கள் ஆட்டோக்கள் அனைத்தையும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் திரு சேது மாதவன் மணி மிகச் சிறப்பாக இரண்டு பாதைகளாக வகுத்து ஒரு பக்கம் செல்வதற்கும் ஒரு பக்கம் வருவதற்கும் அமைத்துக் கொடுத்தனர் கார் பார்க்கிங் சுமார் 6000 காருக்கு மேல் வந்து சென்றனர் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் நின்று கார்களுக்கு ஒருவழிப்பாதையாக  அமைத்து மிக சிறப்பாக போக்குவரத்து நடைபெற்றது இது வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர வேண்டும் என்பதை மக்களின் கோரிக்கை 
 மேலும் பக்தர்கள் சார சாரையாக நடந்து வந்து அம்மனை தரிசித்தனர் 100க்கும் மேற்பட்ட காவல் துறைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் பத்திரகாளி அம்மன் கோவிலின் ஒரு மணி உச்சிக்கால பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது

Share: 1,153 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.