Posted by Admin on 01-08-2026
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அருள்மிகு ஸ்ரீநாச்சியார் அம்மன், ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு உலக நண்மை வேண்டி பூஜை செய்தனர்.
இளையான்குடி அருகேவுள்ள மல்லல் கிராமத்தில் இங்கு எழுதருளி பாலித்து வரும் ஸ்ரீ நாச்சியார் அம்மன், ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மண்டலாபிஷேகம் மற்றும் ஆடித்திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற திருவிழாவாகும். இந்த ஆண்டு கடந்த 24 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கிய இந்த திருவிழாவில் ஏராளமானோர் காப்புக்கட்டி விரதமிருந்துவந்த நிலையில் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் அம்மன் சிறப்பு பூ அலங்காரத்தில் காட்சி தந்தார். இதனை அடுத்து உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கோரி கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர். இதனை அடுத்து ஏராளமான கிராம மக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பி
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
Leave a Comment
Your comment will be visible after admin approval.