Posted by admin on 09-07-2026
திருப்பத்தூர் அருகே ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூலாம்பட்டி கிராமத்தில் மேற்கு கண்மாய்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பகம் விநாயகர் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடம் புறப்பாடுடன் கோவிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க புனித அபிஷேக நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் மீதும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பி
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
Leave a Comment
Your comment will be visible after admin approval.