Posted by admin on 07-07-2026
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக பயிற்சி திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் நான்காம் நாள் 06.07.2026 அன்று இரண்டாம் அமர்வில் கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் S. அந்தோணி டேவிட் நாதன் தலைமை ஏற்று உரையாற்றினார். அவர் மாணவ மாணவியர்கள் சமுதாயத்தில் போதைப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார். மேலும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதி மொழியை முதல்வர் அவர்கள் முன்மொழிந்து மாணவ மாணவியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல்துறை ஆய்வாளர் சி. ஆண்டனட் காலிஸ்டா சிறப்புரை நிகழ்த்தினார். அவர் போதை பொருள்களினால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி மாணவ மாணவிகளிடம் காணொளி மூலம் விரிவாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. சிவானந்தவேல் போதைப் பொருள்கள் இல்லா உலகம் படைத்திடுவோம் என்ற தலைப்பில் பேசினார். முன்பாக கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் முனைவர் இல. கலைச்செல்வி வரவேற்புரை கூறினார். இறுதியாக கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரா. மேகலா நன்றியுரை கூறினார்.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment
Your comment will be visible after admin approval.