Posted by admin on 03-07-2026
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 72-வது ஆண்டு பூச்சொரிதல் விழா துவக்கம்; காப்புக் கட்டி கொடியேற்றம்
சிவகங்கை நகரின் முக்கிய ஆன்மிக திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயிலின் 72-வது ஆண்டு பூச்சொரிதல் விழா காப்புக் கட்டும் நிகழ்வுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலில் விழாவையொட்டி அம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு, கோயில் மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மனை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். விழாவில் கோயில் நிர்வாகத்தினர், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
பூச்சொரிதல் விழாவையொட்டி வரும் நாட்களிலும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
Leave a Comment
Your comment will be visible after admin approval.