Posted by admin on 30-06-2026
ஸ்ரீ ராஜா ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாவட்ட ரோல் பால் போட்டியில் பதக்கங்கள் வென்றனர்.
காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில், அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜா ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள்:
14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு
- சித்தார்த் – 7ஆம் வகுப்பு
- ஜீவநாதன் – 7ஆம் வகுப்பு
- ஆர்யா – 6ஆம் வகுப்பு
- தனுஷ் ஆதித்யா – 10ஆம் வகுப்பு
11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு
- சாய் விஷஹான் – 6ஆம் வகுப்பு
11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு
- ஹயாத்தி – 5ஆம் வகுப்பு
9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு
- சித்தார்த் அபிமன்யு – 1ஆம் வகுப்பு
இந்தச் சாதனைக்காக மாணவர்களை பள்ளியின் நிறுவனரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் சுப்பையா, பள்ளி முதல்வர் வடிவாம்பாள், மற்றும் துணைமுதல்வர் முத்துகுமார் ஆகியோர் பாராட்டி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும், இவ்வெற்றிக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்த வைத்தீஸ்வரன் (உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் வெற்றியாளர்) பள்ளி நிர்வாகம் பாராட்டியது. இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment
Your comment will be visible after admin approval.