Posted by Admin on 28-06-2026
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் ஏழு நகர வாழ்த்து என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
குழிபிறை கிங்கிணிக்கூருடையார் சொக்கப்பன் செட்டி பொய் சொல்லா மெய்யன் எழுதிய பழங்கால நகரத்தார் திருமண ஒலைச்சுவடிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத் தலைவர் நாகப்பன் தலைமை வகித்தார். இரா. சண்முகம் செட்டியார் சித.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நச்சாந்துபட்டி கும.திருப்பதி நூலினை வெளியிட கல்வெட்டுக்கலைஞர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அழகப்பா அரசுக்கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மதிப்புரை வழங்கினார். பதிப்பாசிரியர் மா.இளங்கோ ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பூலாங்குறிச்சி சொர்ணமீனா அழகப்பன் செயல்பட்டார். முன்னதாக அருங்காட்சியக நிறுவனர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பாரதி இலக்கியக்கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். இவ்விழாவில் எழுத்தாளர்கள், புலவர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment
Your comment will be visible after admin approval.