Posted by admin on 28-06-2026
முறையூரில் ஆனி திருமஞ்சன விழா: அன்னை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், ஆனி திருமஞ்சன பெருவிழாவை முன்னிட்டு அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், கடந்த ஜூன் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
விழாவின் எட்டாம் நாளில் சிறப்பு பூஜைகளுடன் அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருமாங்கல்ய தாரணம் மற்றும் மாலை மாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்ற நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
Leave a Comment
Your comment will be visible after admin approval.