Posted by admin on 28-06-2026
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடவன்பட்டியில் கொடிவளைவுத்
திருவிழா நடைபெற்றது.
வடவன்பட்டி கிராமத்தில் உள்ள சந்திவீரன் கோயிலில் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பூஜைகளுடன் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் நள்ளிரவில் வடவன்பட்டி சந்திவீரன் சாமியாடி கொடிவளைவைத் தேடி கையில் அரிவாளுடன் காலில் சலங்கை கட்டி 20 கி.மீ. சென்று உடன்பட்டி கிராமக்கண்மாயில் கொடி வளைவைக் கண்டுபிடித்து சந்திவீரன் கோயில் வந்த சேர்ந்த நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலை சாமியாட்டம் நடைபெற்றது, அரண்மனை தெய்வம், சந்திவீரன், பரிவார தெய்வங்கள், சாமியாடியபடி கொடிவளைவை கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக கண்மாயில் உள்ள ஊர்க்காவலன் கோயில் ஆலமரத்தில் கட்டி விழாவைக் கொண்டாடினர். 130 ஆண்டுகளைக் கடந்து இன்றும் பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தவாரம் எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் வடவன்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திரு்ந்தனர்.
சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜ
மல்லல் ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் ஆடித்திருவிழா. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.
சிவகங்கை மாவட்டம், இளைய
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.
*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து கா
Leave a Comment
Your comment will be visible after admin approval.