Thu, Sep 24, 2026 08:39 AM

திருப்பத்தூர் வரசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா

Posted by admin on 25-06-2026


திருப்பத்தூர் வரசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா

திருப்பத்தூர் வரசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

                             வரசக்தி  விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா   விநாயகர் வழிபாடு வாஸ்துசாந்தியுடன் தொடங்கியது.  கணபதிஹோமம், லெட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் முதல்கால யாகபூஜை பூர்ணாகுதி நடைபெற்றது. ஸ்துூபிஸ்தாபனம், விநாயகர் பிரதிஷ்டையும் 2ம் கால யாகபூஜையும் நடைபெற்றது.   3 ம் காலயாகபூஜையும் குடமுழுக்கு நாளான  4 ம் ஆம் கால யாகபூஜையும் 9 மணிக்கு மகா   பூர்ணாகுதியும்  9.30 க்கும் கடப்பறப்பாடு நடைபெற்று   கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு  தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜை வேதமந்திரங்களை கே.ரமேஷ்குருக்கள்,  கே.சந்திரசேகர குருக்கள்  செய்திருந்தனர். இதில் திருப்பத்தூரைச் சுற்றியுள்ள பத்கர்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழா முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

Share: 757 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.