Wed, Aug 05, 2026 08:34 AM

புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by Admin on 22-06-2026


புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுவயல், வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றம், மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து கல்லூரி கருத்தரங்கு அறையில் "உலக இரத்ததான தின விழிப்புணர்வு "நிகழ்ச்சியை நடத்தினர்.

 மாணவர்களிடையே இரத்ததானத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர், முனைவர் R. சுவாமிநாதன் தலைமையுரை யாற்றினார்.

வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, 

முனைவர் .S. ஐஸ்வர்யா சரண் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் மானகிரி,அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த , நோயியல் நிபுணர் மருத்துவர்.ஷாமிலி, MBBS.,MD., சிறப்பு உரையாற்றினார். 

தமது உரையில், இரத்ததானம் உயிரைக் காக்கும் உயரிய சேவை என்றும், இளைய தலைமுறை சமூக நலச் செயல்பாடுகளில் முனைந்து பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் துணை முதல்வர் முனைவர் .S.லட்சுமி,

 கல்வி -சார் தலைவர் முனைவர் .இரா.நாகேஸ்வரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் .P. ரதிதேவி, உறுப்பினர் G. புவனேஸ்வரி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் G. ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.

Share: 684 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.