Wed, Aug 05, 2026 02:34 AM

கீழக்கோட்டையில் உலக மழைக்காடுகள் தினம்

Posted by admin on 22-06-2026


கீழக்கோட்டையில் உலக மழைக்காடுகள் தினம்

கீழ்க்கோட்டையில் உலக மழைக்காடுகள் தினம் 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக உலக மழைக்காடு தினம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். கணினி பயிற்றுநர் வித்யா வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி பேசும்போது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மழைக்காடுகளின் முக்கியத்துவம்அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காடழிப்பைத் தடுக்கவும் காடுகளை மீட்டெடுக்கவும் மக்களை ஒன்றிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த தினம் 2017 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற அமைப்பான ரெய்ன்ஃபாரஸ்ட் பார்ட்னர்ஷிப்  மூலம் தொடங்கப்பட்டது.  பூமியில் உள்ள நன்னீரில் 20 சதவீதமும் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதமும் அமேசான் போன்ற மழைக்காடுகளிலிருந்துதான் கிடைக்கின்றன. மேலும் உலகின் நிலப்பரப்பு உயிரினங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை இங்குதான் வாழ்கின்றன. 2026 ஆம் ஆண்டிற்கான உலக மழைக்காடுகள் தினத்தின் உலகளாவிய கருப்பொருள் தி ஃபாரஸ்ட் வித்தின் யூ என்பதாகும். மழைக்காடுகள் உலகின் வெப்பநிலை மற்றும் பருவமழையைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற காரணங்களால் மழைக்காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன. எனவே நாம் அனைவரும் மரங்களை நேசிப்போம் இயற்கையை பாதுகாப்போம் பசுமையை வளர்ப்போம் என்றார். கொட்டக்குடி ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை ஆசிரியர்களுடன் இணைந்து நட்டனர். கணிதப் பட்டதாரி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

Share: 336 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.