Thu, Sep 24, 2026 08:38 AM

கல்லல் முருகப்பா பள்ளியில் யோகா தினக் கொண்டாட்டம்

Posted by admin on 22-06-2026


கல்லல் முருகப்பா பள்ளியில்  யோகா தினக் கொண்டாட்டம்

கல்லல் முருகப்பா பள்ளியில் உலக யோகா தினக் கொண்டாட்டம்:

           சிவகங்கை மாவட்டம் கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாடாசனம், பத்மாசனம், புஜங்காசனம், பாலாசனம்,பவனமுக்தாசனம்,
விருஷாசனம்
திரிகோணாசனம்
அர்த்த சக்ராசனம்,
வஜ்ராசனம்,
பாதஹஸ்தானம்  ஆகிய ஆசனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன், தேசிய மாணவர் படை ஆசிரியர் கண்ணதாசன்  மற்றும் காரைக்குடி சங்கமம் அறக்கட்டளையைச் சேர்ந்த சண்முகநாதன், லோகநாதன்,  சண்முகப் பெருமாள் ஆகியோர் யோகப் பயிற்சிகளைக்  கற்றுக் கொடுத்தார்கள். மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்டு உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர். முன்னதாக  தலைமையாசிரியர் அழகப்பன் தலைமையேற்று யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்கறிஞரும், உறுதிமொழி ஆணையிருமான முருகேசன் யோகா தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். ஆசிரியர்கள் கற்பகவல்லி, அமுதா,மாரிமுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரபு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.

Share: 596 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.