Posted by admin on 19-06-2026
ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு; ரயில்வே அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் இன்ஜின் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்புவனம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவின் மகன் வசந்த் (22), வழக்கம்போல் நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும் வழியில் ரயில்வே பீடர் சாலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி ஆய்வுப் பணிக்காக இன்ஜின் மற்றும் ஒரு பெட்டியுடன் சென்ற ரயில் வந்துள்ளது.
ரயில் வருவதைக் கணிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற வசந்த் மீது ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த வசந்தின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.