Posted by admin on 04-08-2026
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் சட்டப்படி எடுத்துச் செல்லப்படும். தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சீரணி அரங்கில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் தமிழக முதல்வரின் 52வது பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தலைமை தாங்கினார்.
விழாவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொகுதியில் மாற்றத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
விழாவில் பேசிய தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை விமர்சித்து, கூட்டுறவுத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் சட்டப்படி எடுத்துச் செல்லப்படும் என்றும், அவதூறு அல்லது அனாகரிகமான பேச்சுகளுக்கு பதிலாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.