Posted by Admin on 18-06-2026
தேர்போகியில் நாட்டியாஞ்சலி விழா
திருப்பத்தூர், திருவாடானை அருகேயுள்ள பழைய தேர்போகியில் சர்க்கரை முனீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேத்தையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அருள்மிகு சர்க்கரை முனீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டு கால யாகபூஜைகளும் பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் தில்லை ஆரூரன் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்வில் கணேசஸ்துதி, நடேசகௌத்துவம், கீர்த்தனை, காவடிச்சிந்து, பரஸ்தில்லானா போன்ற பாவனைகளில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டியப்பள்ளியின் குரு யோகேஸ்வரி செயல்பாட்டாளர்கள் மீனாட்சி மருதுபாண்டியன், மாணவிகள் சாய்ஸ்ரீ, ஷிவானிஸ்ரீ்
சாதனா, ஹேமாஸ்ரீ், அட்சயா, பிரியதர்ஷினி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஜெயலெட்சுமி அம்மாள் கோபால் குடும்பத்தினர், மணிகண்டகுருக்கள் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளராக பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில் நாட்டியப்பள்ளி மாணவிகளுக்கு கும்பாபிஷேக குழு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.