Thu, Sep 24, 2026 08:51 AM

இன்ஸ்டாகிராம் நட்பால் கேரளா செல்ல முயன்ற 18 வயது இளம்பெண்; பஸ்சில் தேடி மீட்ட சிங்கப்பெண் போலீசார்!

Posted by admin on 17-06-2026


இன்ஸ்டாகிராம் நட்பால் கேரளா செல்ல முயன்ற 18 வயது இளம்பெண்; பஸ்சில் தேடி மீட்ட சிங்கப்பெண் போலீசார்!

இன்ஸ்டாகிராம் நட்பால் கேரளா செல்ல முயன்ற 18 வயது இளம்பெண்; பஸ்சில் தேடி மீட்ட சிங்கப்பெண் போலீசார்!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் போலீஸ்” திட்டம் மீண்டும் ஒரு முறை தனது செயல்திறனை நிரூபித்துள்ளது.

சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிங்கப்பெண் போலீஸ் படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு, அந்த இளம்பெண் மேலூர் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த சிங்கப்பெண் போலீசார், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பல பேருந்துகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி வந்ததும், அவரை நேரில் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

மீட்கப்பட்ட இளம்பெண் பின்னர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிங்கப்பெண் போலீசாரின் விரைவான நடவடிக்கையால் இளம்பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Share: 4,329 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.