Thu, Sep 24, 2026 08:08 AM

வண்டி உடைந்தாலும் விடாத மாடு... ரசிகர்களை கவர்ந்த ஓட்டம்!

Posted by Abinaya on 30-08-2026


வண்டி உடைந்தாலும் விடாத மாடு... ரசிகர்களை கவர்ந்த ஓட்டம்!

சிவகங்கை அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வண்டி சேதமடைந்த நிலையிலும் தனியாக  ஓடி ரசிகர்களை கவர்ந்த மாடு. சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை அருகே நடைபெற்ற மாட்டுவண்டி எல்லை பந்தயத்தில், போட்டியில் வண்டி சேதமடைந்த நிலையிலும், தனியாக  ஓடி வந்த பந்தய மாடு, பார்வையாளர்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

சிவகங்கை அருகே உள்ள பனங்காடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. ரோஸ்நகர்–தொண்டி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கிலோமீட்டரும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கிலோமீட்டரும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. இதில் பெரிய மாட்டுப் பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் சீறிப்பாய்ந்தன. சென்னையைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மாட்டு வண்டி விபத்தில் சிக்கி வண்டி உடைந்தது.  உடைந்த வண்டியில் இருந்த ஒரு மாடு தனியாகப் பிரிந்து திடீரென பந்தய பாதைக்குள் நுழைந்து, போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கு இணையாக தொடர்ந்து ஓடியது. சில நிமிடங்களில் அந்த மாடு முன்னணிக்கு சென்று, பந்தய இலக்கை நோக்கி முதலாவதாக ஓடிய காட்சி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

“பந்தயத்தில் வென்றது யார்?” என்ற கேள்வியை விட, “அந்த மாடு எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வியே அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிகம் பேசப்பட்டது. பலரும் அந்த காட்சியை செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

போட்டி நிறைவில் இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில், எதிர்பாராத விதமாக ‘போட்டியாளராக’ மாறிய தனி மாடுதான் அனைவரின் மனதிலும் நீங்காத நினைவாக அமைந்தது.

Share: 1,908 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.