Posted by Sabana on 21-09-2026
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு சீரமைப்பு!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, கண்டதேவி - தேவகோட்டை பிரதான சாலையில் இருந்த பழமையான புளிய மரம் ஒன்று திடீரென வேரோடு முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் குறுக்காக விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை நவீன இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தி, போக்குவரத்தை உடனடியாகச் சீரமைத்தனர்.
முக்கிய பிரதான சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் விரைவாகச் செயல்பட்டுச் சீர்செய்த தேவகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
தேர்தல் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் மனம் உடைந்து போய் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகினோம் காரைக்குடியில் வைகோ பேட்டி.
தேர்தல் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் மனம் உடைந்து போய் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகினோம்.
காரைக்
Leave a Comment
Your comment will be visible after admin approval.