Thu, Sep 24, 2026 08:36 AM

சிவகங்கை திமுக சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

Posted by Admin on 13-08-2026


சிவகங்கை திமுக சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

சிவகங்கை: திமுக சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

 

 

சிவகங்கை நகரில் திமுக சார்பில் ஒட்டப்பட்ட கண்டன சுவரொட்டிகள் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், சேலத்தில் போதைப்பொருள் தொடர்பான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் விவகாரம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை என்றும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளன. இந்த சுவரொட்டிகள் சிவகங்கை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திருமலை குமணன் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சுவரொட்டிகள் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share: 22 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.