Posted by admin on 06-08-2026
துபாயில் மர்ம மரணம்: கணவரின் உடலை மீட்டுத் தர கோரி மனைவி மனு
துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மானாமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஜிகலா. இவரது கணவர் திருநாவுக்கரசு கடந்த 19 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
முதலில் மாரடைப்பு என கூறப்பட்ட நிலையில், பின்னர் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.
எனவே, இந்திய வெளியுறவுத்துறை மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் முழுமையான விசாரணை நடத்தி, உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
மனு அளித்தார்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.