Posted by admin on 30-07-2026
பிரபல ரவுடி ஊர்காவலன் வெட்டிக்கொலை – வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஊர்காவலன் (31) மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊர்காவலன் மீது சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சகோதரர் பிரசாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், 2021-ல் இருவரை வெட்டிக்கொலை செய்த வழக்கிலும் அவர் தொடர்புடையவராக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மானாமதுரை காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊர்காவலனை கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினரை அரிவாளால் தாக்க முயன்ற சம்பவத்தில், போலீசார் ஊர்க்காவலனை காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாத்தூரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஊர்காவலனை, அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பாச்சேத்தி போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு முத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிரபல ரவுடி வீட்டில் புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.