Posted by Admin on 27-07-2026
காரைக்குடி-திருப்பத்தூர் சாலை தென்கரை மேம்பாலம் அருகில் இருந்த பள்ளத்தை எச்சரிக்கை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மோதி காளிதாஸ் (வயது 55) என்ற கட்டிட ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் காளிதாஸ் (வயது 55) என்ற கட்டிட ஒப்பந்தக்காரர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் தம்பிபட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமகன் காளிதாஸ் (55). இவர் கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில், இவர் திருப்பத்தூரிலிருந்து பைக்கில் தென்கரை சென்றுள்ளார். அப்போது தென்கரை மேம்பாலம் இறக்கத்தில் பள்ளம் தோண்டப்பட்டு எச்சரிக்கையாக வைத்திருந்த டிரம்மில மோதி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியாபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.