Posted by Admin on 27-07-2026
*மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் திருக்கல்யாண வைபவம்*
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் சுந்தரராஜப் பெருமாள், சௌந்தர்வல்லித் தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி பிரமோத்ஸவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் சௌந்தரவல்லித் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. சுந்தரராஜப் பெருமாள் சார்பில் மூலவர் சௌந்தரவல்லித் தாயாருக்கும் உற்சவருக்கும் திருமாங்கல்ய நாண் அனுபவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோபி மாதவன் தலைமையிலான ஆச்சாரியார்கள் திருக்கல்யாண சடங்குகளை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனர். பின்னர் சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் பல்லக்கில் வீதி உலா வந்தார்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.