Posted by Admin on 27-07-2026
காரைக்குடியில் பாதாள சாக்கடை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்ட அமைச்சர் டாக்டர் டிகே பிரபு.
காரைக்குடி மாநகராட்சியில் ரூ.140.13 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செயல்பாட்டு வந்தாலும், முழுமை அடையவில்லை. மொத்தம் 32,000 கட்டிடங்களுக்கு இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் பாதி கூட இணைப்பு கொடுக்கவில்லை.
மேலும் பாதாள சாக்கடை குழாய்களில் குப்பை போன்றவற்றால் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, ஆள்நுழைவு குழிகளிலிருந்து கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதாள சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள் உள்ளாகினர். அடைப்புகளை அகற்ற முடியாமல் ஊழியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும், ரஸ்தாவில் தினமும் 16 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அந்த நிலையம் முறையாக செயல்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அடிக்கடி, ஆள்நுழைவு குழியிலிருந்து தேனாற்றில் கழிவுநீர் திறக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, பாதாள சாக்கடை பிரச்சினையை கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு மாநகராட்சி அதிகாரிகளுக்கு முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதையடுத்து, பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ‘ஜென்ரோபோடிக்’ இயந்திரத்தை வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்த இயந்திரத்தை ஏற்கனவே கனிமவளத்துறை அமைச்சர் பார்வையிட்டார். இந்த இயந்திரம் மூலம் மனிதர்களே இல்லாமல் கழிவுநீர் அடைப்புகளை அகற்ற முடியும். இயக்குபவர் மட்டும் இருந்தால் போதும்.
இதில் ஆள்நுழைவு மூடியை திறந்ததும் நச்சு வாய்வு இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். மேலும், அடைப்புக்கான காரணத்தை சென்சார் மூலம் உணர்ந்து, துல்லியமாக அகற்றும். பின்னர், கால்வாயிலிருந்து எடுக்கப்படும் பொருட்களை அதுவே வாகனங்களில் வைக்கும். இதனால் மனிதர்களை பயன்படுத்தவே தேவையில்லை.
அதேபோல், சுத்திகரிப்பு நிலையத்தில் குறைந்த செலவில் நுண்ணுயிரி மூலம் சுத்திகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கழிவுநீரில் நுண்ணுயிர் மூலம் சுத்திகரிக்கும் முறையை அமைச்சர் பார்வையிட்டார். இதில் கழிவுநீரில் பாக்டீரியாக்கள் விடப்படும். அவை கழிவுகளை உண்டுவிடும்.
இதனால் தூய்மையான நீர் வெளியேறும். அதை விவசாயத்துக்கு முழுமையாக பயன்படுத்த முடியும். இதன்மூலம் துர்நாற்றம் இருக்காது. நீரில் மீன்களை வளர்க்க முடியும். தினமும் ஆயிரம் மதிப்புள்ள நுண்ணுயிர்களை பயன்படுத்தினாலே போதும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.