Wed, Aug 05, 2026 04:03 AM

மானாமதுரை திரையரங்கில் ஜனநாயகன் டிக்கெட் விலை உயர்வால் ரசிகர்கள் அதிருப்தி

Posted by admin on 23-07-2026


மானாமதுரை திரையரங்கில் ஜனநாயகன் டிக்கெட் விலை உயர்வால் ரசிகர்கள் அதிருப்தி

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திரையரங்கில் டிக்கெட் விலை உயர்வு தொடர்பாக ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் அதிருப்தி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்புக் காட்சிகளுடன் ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. இதையொட்டி மானாமதுரை பகுதியில் உள்ள திரையரங்கிற்கு அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர்.

திரையரங்கிற்கு செல்லும் வழித்தடங்களில் தமிழக வெற்றிக்கழக கொடிகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆட்டம், பாட்டம் மற்றும் உற்சாக முழக்கங்களுடன் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர்.

இந்த நிலையில், திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரசிகர்களுக்கும் திரையரங்கு நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ரசிகர்கள் பைட்:

"அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக டிக்கெட் விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்."


இதனைத் தொடர்ந்து டிக்கெட் கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் திரையரங்கு நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை தொடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும், அதிக கட்டண வசூல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share: 14 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.