Posted by admin on 23-07-2026
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் DYFI–SFI ஆர்ப்பாட்டம்; மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது மத்திய அரசு மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DYFI மற்றும் SFI அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இரு அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்", "அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்", "மாணவர்கள் மீது அடக்குமுறையை கைவிட வேண்டும்", "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டியது அரசின் கடமை என்றும், கல்விக் கொள்கைகளில் மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அரண்மனைவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.