Posted by admin on 18-07-2026
காரைக்குடியில் பெண் தாசில்தார் வீட்டில் 65 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு - போலீசார் விசாரணை*
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் சாந்தி இவர் சிவகங்கையில் சமூக நலத் துறை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் மாலையில் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 65 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.