Thu, Sep 24, 2026 08:09 AM

அரசு பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: பெண், சிறுமி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

Posted by admin on 18-07-2026


அரசு பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: பெண், சிறுமி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

அரசு பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: பெண், சிறுமி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் அருகே அரசு விரைவு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரையை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதேபோல், மதுரை மதிச்சியம் பகுதியில் இருந்து இடைக்காட்டூர் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சுமார் 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்புவனம் புதூர் அருகே வந்தபோது அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 5 வயது மதிக்கத்தக்க சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த மற்றவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share: 815 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.