Thu, Sep 24, 2026 08:09 AM

இளம் பெண் மருத்துவர் மர்ம மரணம்; உறவினர்கள் அதிர்ச்சி.

Posted by admin on 17-07-2026


இளம் பெண் மருத்துவர் மர்ம மரணம்; உறவினர்கள் அதிர்ச்சி.

இளம் பெண் மருத்துவர் மர்ம மரணம்; உறவினர்கள் அதிர்ச்சி.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணபதிபட்டியைச் சேர்ந்த சின்னநம்பி (25) என்ற இளம் பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்த அவர், கடந்த 16-ம் தேதி பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சின்னநம்பி, உடல்நலம் சரியில்லை என பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.

தனது தந்தைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற நிலையில், மாலையில் வீட்டில் மூச்சு மற்றும் பேச்சு இல்லாத  நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஊசி மற்றும் மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுவதால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் உடற்கூறாய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.

Share: 1,124 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.