Posted by admin on 13-07-2026
பூட்டியிருந்த வீட்டில் 60 கிராம் தங்கம், வெள்ளி கொலுசு,90 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பட்டபகலில் கொள்ளையடித்து சென்ற இருவர் கைது
தங்க நகை, பணம், வெள்ளி கொலுசு பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை காந்தி நகரில் சித்ரா, ராஜா தம்பதியர் வசித்து வருகின்றனர்.
வழக்கம் போல கனவன் ராஜா,மனைவி சித்ரா இருவரும் கடந்த புதன்கிழமை காலை வீட்டின் கதவை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வீடு திறந்து கிடப்பதாக சித்ராவிற்கு பக்கத்து வீட்டு காரர் தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் பதறி அடித்து கொண்டு வீட்டுற்கு வந்த சித்ரா பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதை கண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு 60 கிராம் தங்கம், வெள்ளி கொலுசு,90 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மதடி கொள்ளையை சேர்ந்த சுந்தரகுமார் 36, ஆலங்குடி சுந்தரநாயகிபுரம் திருக்கட்டளையை சேர்ந்த செல்வம் 46 ஆகிய இருவரையும் எஸ்.வி.மங்கலம் போலீசார் கைது செய்து தங்க நகை,பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.