Fri, Sep 25, 2026 10:28 AM

சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயிலில் 72 ஆவது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா

Posted by Admin on 11-07-2026


சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயிலில் 72 ஆவது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 72-வது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 72-வது ஆண்டு பூச்சொரிதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆனி மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த ஜூலை 3-ஆம் தேதி காப்புக் கட்டுதல், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோயில் கொடிமரத்திற்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும், பால்குடம் எடுத்து வந்தும், பூக்களை தூவியும், அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக, குழந்தையுடன் அருள்பாலிக்கும் பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Share: 979 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.