Posted by admin on 06-07-2026
பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி 50 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் ஆண் நண்பருடன் கைது. மூவருக்கு வலைவீச்சு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் வடிவேல் (40). இவரை கடந்த ஜூன் மாதம் கைபேசி மூலம் தொடர்புகொண்ட 'கவிதா' என்ற பெண், நயமாகப் பேசி பழகியுள்ளார். தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி கடந்த ஜூன் 9-ஆம் தேதி வடிவேலிடமிருந்து G Pay மூலம் ₹4,500 வாங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வரவழைத்த அந்தப் பெண், தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி மறைந்திருந்த கும்பல் வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி, கொடூரமாகத் தாக்கி ₹50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தையும் செல்போனையும்பறித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த குற்றவாளிகளை கண்டறிந்து முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.