Thu, Sep 24, 2026 08:39 AM

எஸ்.எஸ் கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்

Posted by Admin on 05-07-2026


எஸ்.எஸ் கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்

எஸ் எஸ் கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம். 23 ஜோடி மாடுகள் பங்கேற்பு. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியினை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களிப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாகோட்டையில் சந்திவீரன் கோவில் ஆணி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. எஸ் எஸ் கோட்டை, திருப்பத்தூர் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 15 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவிற்கு 8 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிலோமீட்டர் தூரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.போட்டியினை மல்லாகோட்டை, திருப்பத்தூர் எஸ் எஸ் கோட்டை, கருப்பூர் கோட்டையிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்து உற்சாகமாகக் கண்டுகளித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பனமும் பரிசுக்கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share: 863 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.