Fri, Sep 25, 2026 10:28 AM

ஜி-பே மூலம் அதிகாரிகளுக்கு கணக்கில் வராத 15 லட்சம் அனுப்பியது அம்பலம் காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு

Posted by admin on 04-07-2026


ஜி-பே மூலம் அதிகாரிகளுக்கு கணக்கில் வராத 15 லட்சம் அனுப்பியது அம்பலம்   காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு

*காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல். 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு  ரூ.15 லட்சம் அனுப்பியதும் கண்டுபிடிப்பு*

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார்,
 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு ரூ.15 லட்சம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்  சிவகங்கை லஞ்சஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு வரை தொடர்ந்தது. 
அப்போது கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஒவ்வொரு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஜி-பேயில் பண பரிமாற்ற விவரங்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில், 10 ஒப்பந்ததாரர்கள் மூலம்  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரின்  வங்கி கணக்குகளுக்கு  10 மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஜி- பே க்கு ரூ.15 லட்சத்து 74 ஆயிரம் வரை அனுப்பியதை கண்டறிந்தனர். மேலும் அவர்களிடம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share: 13 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.