Posted by Admin on 04-07-2026
அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாட்டம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரகாஷ் பேப்பர் மில் நிறுவனத்தில் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தயாரித்து வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின.
மாலை பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்ற நிலையில், இரவு சுமார் 7.30 மணியளவில் நிறுவனத்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் உலர்ந்த அட்டைப்பெட்டிகள் காரணமாக தீ வேகமாக பரவியது.
மதுரை அனுப்பானடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பலத்த காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணையில், நிறுவன வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த சாம்பல் கழிவுகளில் இருந்த தீக்கங்குகள் அட்டைப்பெட்டிகளில் பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.