Fri, Sep 25, 2026 02:16 PM

சிவகங்கையில் ஆதரவற்ற மாணவர்களுக்கு அறுசுவை அன்னதானம்

Posted by admin on 03-07-2026


சிவகங்கையில் ஆதரவற்ற மாணவர்களுக்கு அறுசுவை அன்னதானம்

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற மாணவர்களுக்கு அறுசுவை அன்னதானம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்  52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்கம் சார்பில் சிவகங்கை ஆர்.ஆர்.கே. பள்ளியில் பயிலும் ஆதரவற்ற 54 மாணவர்களுக்கு அறுசுவை அன்னதானம், இனிப்புகள், கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தொழிற்சங்க நிர்வாகி செந்தில் சதீஷ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த்  வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆதரவற்ற 54 மாணவர்களுக்கு படுக்கைப் பாய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், கல்வி உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செந்தில்குமார், மகாலிங்கம், செல்வம், செல்லப்பாண்டி, சுப்பிரமணி, அசோக், வீரபாண்டி, சாமுவேல், மருதுபாண்டியன், தசரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் காளீஸ்வரன், நகரச் செயலாளர் கோபி, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மண்டல, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் பூத் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

Share: 14 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.