Posted by admin on 02-07-2026
சிவகங்கையில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேடு? சிறப்பு ஆய்வு கோரி கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேடு நடைபெறுவதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
3 லிட்டருக்கு பதிலாக 2 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், முழு அளவு வழங்கியதாக TNEPDS பதிவுகளில் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலருக்கு பொருட்கள் பெறாத நாளிலேயே பெற்றதாக குறுஞ்செய்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மண்ணெண்ணெய் விநியோகச் சங்கிலி முழுவதும் சிறப்பு தணிக்கை நடத்த வேண்டும் என நுகர்வோரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிகுமாரிடம் கேட்ட போது, புகார் மற்றும் ஆதாரங்கள் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தி, முறைகேடு உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.