Posted by admin on 30-06-2026
*கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தைப் போட்டியில் முதன்மை இடங்களை வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள்*
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர் மணீஷ் சர்மா மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஸ்ரீமுகில் ஆகியோர் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் பதக்கங்கள் வென்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்திய இளைஞர் விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் சங்கம் (Youth Sports & Activities Association of India – YSAA) சார்பில், 2026-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய தேசிய அளவிலான வில்வித்தை (Archery) சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 26 முதல் 29 வரை கோவாவில் நடைபெற்றன.
இப்போட்டியில் பங்கேற்ற இப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ஸ்ரீமுகில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், ஆறாம் வகுப்பு மாணவரும் இளம் வில்வித்தை வீரருமான மணீஷ் சர்மா, தனது வயது பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும், இப்போட்டியில் பங்கேற்ற தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்று "Overall Second Prize Trophy"-யை வென்றது.
இது குறித்து வில்வித்தை பயிற்றுநர் சுரேஷ் சிங் கூறுகையில், "மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று பதக்கங்களை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவர்கள் எதிர்காலத்தில் சர்வதேச அளவிலும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.
தேசிய அளவில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மனமாரப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.