Thu, Sep 24, 2026 08:44 AM

பாலாறு தடுப்பணை விவகாரம்: திட்டத்தை மறுஆய்வு செய்ய முதல்வருக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

Posted by admin on 28-06-2026


பாலாறு தடுப்பணை விவகாரம்: திட்டத்தை மறுஆய்வு செய்ய முதல்வருக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் எதிர்ப்பு

தடுப்பணை கட்டும் இடத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வு

கூட்டுறவு துறை செயலாளர் அரசாணையில் பல குளபடிகளை செய்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த தவறான அரசாணை போடப்பட்டு அரசை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு


மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு 
வருகின்றனர்.

அதனை தொடர்ந்து சிங்கம்புணரி பகுதி  விவசாயிகளுடன்  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தடுப்பணை குறித்து ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது சூரப்பட்டி கிராமத்திற்கு பயனில்லாத வகையில் தனியார் தண்ணீர் விற்பனை நிலையத்திற்கு ஆதரவான வகையில் இந்த இடத்தில் ஒரு தடுப்பணை தளம் மட்டத்திலிருந்து ஆறடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.

தளமட்ட சுவரும், இரண்டு பக்கம் இறக்கைகான சுவரும் அமைப்பதில் இந்த பகுதி விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை ஆனால் தளமட்டத்திற்கு மேலே ஆறடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமானால் சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்ட ஆட்சியர்களிடம் தடையின்மை சான்று நீர் பாசனத்துறை பெற்றிருக்க வேண்டும்.அப்படி பெற்றிருப்பார்களேயனால் மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளுடைய கருத்தை கேட்டு விவசாயிகள் ஒப்புதலோடு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருப்பார்கள்.

ஆனால் தனியார் தண்ணீர் விற்பனை நிலையத்திற்கு ஆதரவாக நீர் பாசனத்துறையும் மறைமுகமாக இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி ஒட்டுமொத்தமாக 600 பாசன குளங்களையும்,நிலத்தடி நீரையும்,500 க்கும் மேற்பட்ட கிராமங்களையும் அடியோடு அழிக்கும் நடவடிக்கை நீர்ப்பாசனதுறை ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படி அரசின் நிதி 9.5 கோடியை தனி நபருகக்காக தனி நபரிடம் இருந்து ஆதாயம் பெறுவதற்காக நீர்ப்பாசனத்துறை இப்படி ஒரு தடுப்பு சுவர் ஏற்படுத்துவதை இந்த பகுதி விவசாயிகள் அனுமதிக்கவில்லை 500 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


அதிகாரிகள் தவறான தகவல்களை ஆட்சியாளர்களுக்கு சொல்கிறார்கள் கடந்த ஆட்சியில் ஊழல் முறைகேடு நடந்ததாக தற்போது ஊழல் முறைகேடு இல்லாமல் மக்கள் ஆட்சி நடத்துவேன் என்று சொல்லுகின்ற  முதலமைச்சர் இப்படி மக்கள் கூடி நின்று போராடுகிறபோது மக்களுடைய கருத்தை காதில் வாங்கி அதற்கு உரிய தீர்வு கானுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உரிய உத்தரவிட வேண்டும்.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுகின்ற புஸ்ஸி ஆனந்த இது குறித்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதில் தடுப்பு சுவர் அமைப்பதை கைவிட்டு தளமட்ட சுவரோடு ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தி கீழ்பகுதி நீர் செல்வதை தடை செய்யாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். எனவே உடனடியாக முதலமைச்சர் அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் மதுரை‌ மேலூர் பகுதி சிவகங்கை இராமநாதபுரம் உள்பட 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்ட களத்திற்கு தள்ளப்படுவார்கள் என நான் எச்சரிக்கிறேன்.

மேலும் சூரப்பட்டி விவசாயிகளும் இந்த தடுப்பணையால் எங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என கூறி சிங்கம்புணரி பாலாறு ஒருங்கிணைப்பு குழுவினருடன் சேர்ந்து சூரப்பட்டி,இந்திரா நகர்,பொட்ப்பட்டி மற்றும் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொள்ளபோவதாக எச்சரித்தனர்.

Share: 619 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.