Fri, Sep 25, 2026 10:28 AM

சிவகங்கையில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து

Posted by admin on 28-06-2026


சிவகங்கையில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து

சிவகங்கை மாவட்டத்தில் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து… இதில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி… போலீசார் தீவிர விசாரணை…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை – சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உருளி விளக்கு பகுதியில்  சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கி கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, திருப்புவனம் அருகே பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் காரில் வந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் கார் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், கார் ஓட்டுநர் அருண் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயமடைந்த அருணின் மனைவி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share: 1,996 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.