Posted by Admin on 27-06-2026
மத நல்லிணக்கம் அடிப்படையில் இஸ்லாமியர்கள்
இந்துக்கள்இணைந்து கொண்டாடிய
மொகரம் பண்டிகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாரம்பரியமிக்க ஜமீன் கோட்டை என்று அழைக்கப்படும் வாராப்பூர் கிராமத்தில் மொகரம் பண்டிகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இங்கு வசித்து வரும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் ஒன்றிணைந்து இங்குள்ள பாத்திமா நாச்சியார் தர்காவில் மத நல்லிணக்க அடிப்படையில் இரண்டு நாள் விழாவாக இந்நிகழ்வை கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் பானக்கம் கரைத்தல், பூக்குழி இறங்குதல், சந்தனம் பூசுதல், பிரார்த்தனை வழிபாடு என பல்வேறு நிகழ்வுகள் விடிய விடிய அரங்கேறின. சாதி மத பேதம் இல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்துக்கள் இன்னும் ஏனைய பிற மதத்தினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பூக்கள், ஊதுபத்தி, சக்கரை முதலியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தினர். தொடர்ந்து இங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பூக்குழியில் இறங்கும் நிகழ்விலும் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நள்ளிரவில் வண்ண வண்ண வானவேடிக்கையுடன் மேல தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த கண்கொள்ளாக் காட்சியினை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கண்டு ரசித்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் பல நூறு ஆண்டுகளாக இப்பகுதியில் பாரம்பரியமாக இவ்விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும்
இவ்விழாவிற்க்கு என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கு வருகை தருவது ஒரு சிறப்பு அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.