Thu, Sep 24, 2026 08:37 AM

சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா

Posted by admin on 26-06-2026


சிறுகூடல்பட்டியில்  "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு


  சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் 100 ஆவது பிறந்தநாளையொட்டி நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

                        கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவர் பிறந்த வீட்டில் பாரதி இலக்கியக்கழககமும் திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து  கவிஞரின் 100 பிறந்தநாளை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார்,. பாரதி இலக்கியக்கழகத் தலைவர் ஜெ.யச்சந்திரன் புலவர் மெய்யாண்டவர், கண்ணதாசன் மகள் விசாலி, குடும்பத்தினர் பழனியப்பன், சாத்தப்பன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூலினை வெளியிட சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனர் சேதுகுமணன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் கண்ணதாசனின் வாழ்க்கைத் தொகுப்பினை குறித்துப் பேசினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Share: 1,269 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.