Fri, Sep 25, 2026 10:29 AM

முத்துவடுகநாதர் குரு பூஜையை முன்னிட்டு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அஞ்சலி

Posted by admin on 26-06-2026


முத்துவடுகநாதர் குரு பூஜையை முன்னிட்டு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அஞ்சலி

மன்னர் முத்துவடுகநாதர் குருபூஜை ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் அஞ்சலி.


 சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் கணவரும், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னருமாகிய முத்துவடுகநாத தேவரின் 254 -ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்த்து கி.பி. 1772-ஆம் ஆண்டு ஜூன் 25-ல், காளையார்கோவிலில் ஆங்கிலேயப் படைகளுடன் (பெஞ்சர் தலைமை) போரிட்டு இதே நாளில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு முத்து வடுகநாத தேவருக்கு நினைவிடம் கட்டப்படும் என அறிவித்தது. அதன்படி, காளையார் கோவிலில் முத்து வடுகநாதர் தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மன்னர் முத்துவடுகநாதரின் 254 - ஆவது நினைவு தினம் காளையார்கோவிலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்   அனுசரிக்கப்பட்டது. மன்னர் குடும்ப வாரிசுதாரரும், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவருமான டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார், முத்துவடுகநாதரின் நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், பாஜக பிரமுகர் மேப்பல் சத்தியநாதன், காங்கிரஸ் பிரமுகர் சந்தியாகு, மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியார் மக்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் அங்குசாமி, செயலர் வீரசேகர், பொருளாளர் செல்வம், செல்வமினால், வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெ.கோபால்துரை, சகா.மணிமுத்து,  தேவஸ்தான மேலாளர் இளங்கோ, மன்னர் பள்ளி தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Share: 513 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.