Thu, Sep 24, 2026 08:10 AM

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை முற்றுகை

Posted by admin on 25-06-2026


பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை முற்றுகை

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வேளாண்மை அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட செந்தட்டியேந்தல் வருவாய் கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தென் மண்டல விவசாயிகள் சங்கத்தினர் வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசகுளம், புதுக்குளம், தாலிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2025-26 பருவத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், சுமார் 180 ஏக்கர் நிலங்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தங்களது கோரிக்கை மனுவை வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினர். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் முன்பு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

Share: 775 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.