Posted by admin on 25-06-2026
திருப்பத்தூரில் ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வானயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.ஆகாஷ் தலைமை வகித்தார். திருப்பத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களான திருக்கோஷ்டியூர், இளையாத்தங்குடி, நாச்சியாபுரம், நெற்குப்பை, ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. திருப்பத்தூரில் 104 மனுக்களும் காரைக்குடியில் 20, தேவகோட்டை 73 காளையார்கோயில் 53, இளையான்குடி 90 மனுக்கள் என 368 மனுக்கள் தீர்வு காண ஆய்விற்குட்படுத்தப்பட்டது. இதில் தீர்வு கண்ட மனுக்களின் பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் சான்றுக்கான உத்தரவு வழங்கினார். இதில் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட வருவாய் துறையினர் பங்கு கொ்ண்டனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.